வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (09:59 IST)

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

Rahul Gandhi
நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில் அதிலிருந்து அவர் பேசிய சில வரிகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.



நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும் அவர் நீட் குறித்தும், அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டும் பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக பிரமுகர்கள் பலரும் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி பேசிய சில வரிகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். அதில் பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுவது, அதானி, அம்பானி மீதான விமர்சனம், நீட் தேர்வு வணிக மயமாகிவிட்டதாக பேசியது, அக்னிபாத் திட்டத்தை ராணுவத்திற்காக அல்லாமல் பிரதமர் அலுவலகத்திற்காக பயன்படுத்துவதாக விமர்சித்தது உள்ளிட்ட பலவற்றை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.

Edit by Prasanth.K