புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (07:51 IST)

நடிகைகள் அளித்த வாக்குமூலம்.. முன்னணி மலையாள நடிகர் மீது வழக்குப்பதிவு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மலையாள நடிகைகள் அளித்த புகார்கள் காரணமாக ஏற்கனவே இயக்குனர் ரஞ்சித், இயக்குனர் முகேஷ் உள்பட சிலர் மீது பாலியல் வழக்கு பதிவு ஆகியுள்ள நிலையில் தற்போது மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணை குழுவிடம் முன்னணி நடிகை ஒருவர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அந்த நடிகை வாக்குமூலம் அளித்த நிலையில் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஜெயசூர்யா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இது இரண்டாவது வழக்கு என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. நடிகைகள் பாலியல் வழக்கில் முன்னணி நடிகர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva