1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. kavitha get bailfrom supreme court

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. 5 மாதம் மழித்து கவிதாவுக்கு ஜாமின்..!

டெல்லி மதுபான வழக்கு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் கவிதா அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும்  தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை, சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்துகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்,
 
 கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து மீண்டும் அவர் அதிரடியாக அரசியல் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
நான் ஒரு மூத்த குடிமகன்.. நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி