1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (18:17 IST)

ப.சிதம்பரத்திடம் ராகுல்காந்தி டியூசன் கற்ற வேண்டும்... மத்திய அமைச்சர் விமர்சனம் !

இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் தப்பியோடியதாக விஜய் மல்லையா அறியப்படுகிறார். உவரை போலவே பல்வேறு பணக்காரர்கல், நிறுவன தலைவர் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்து வருகின்றனர். கடன் வாங்கி திரும்ப செலுத்தாத முன்னணி தொழில் நிறுவனங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தன்னார்வலர் ஒருவர் கோரியிருந்தார்.

அந்த தகவலின்படி விஜய் மல்லையா தனது விமான நிறுவனம் மீது பெற்ற ரூ.1,943 கோடி, வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மீது வாங்கப்பட்ட ரூ.5,492 கோடி கடன் உள்பட மொத்தம் 50 இந்திய செல்வந்தர்களின் வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து மத்திய அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவது இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தக் தகவலை பாராளுமன்றத்தில் வெளியிடத் தயங்குவது ஏன் ?பாஜகவின் நண்பவர்கள் நிரவ் மோடி மெகுல் சோக்சி , மல்லையா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதனால்தான் இந்த விவகாரம் மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு மத்திய நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிலில் ராகுலுக்கு பதிலளித்துள்ளார்
தற்போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராகுல் காந்தியை விமர்துள்ளார். அவர் கூறியதாவது : கடன் தள்ளுபடி வேறு, வராக் கடன் என்பது வேறு… வராக் கடனை கழித்துவிட்டுக் கணக்கு வைத்திருப்பது என்பது வேறு என தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கணக்கில் வந்து சேராத கடன்களை கணக்கின்படி தனியாக வைத்திருப்பதுதான் வங்கி நடைமுறை ஆகும். எனவே ராகுல் இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திடம் டியூசன் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்