1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (17:49 IST)

காங்கிரஸ் தலைவராக இருக்க முடியாது: அவமானத்தில் அடம்பிடிக்கும் ராகுல்!

தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க ராகுல் காந்தி விருப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர்.  
ஆனால் தற்போது ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் கண்டிப்பாக நீடிக்க முடியாது வேறு நபரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி விட்டதாக செய்திகள் வருகிறது. 
 
ராகுல் காந்தி இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் இப்படி கூறியதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதோடு தோல்வியின் காரணமாக முடங்கிபோய் உள்ளதாக கூறப்படுகிறது.