செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (10:16 IST)

காங்கிரஸின் ஹிட் லிஸ்ட் ரெடி - அதிரடி அவதாரம் எடுக்கும் ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் பதவி விலகுவதாக அறிவித்தார். இதை ஏற்றுகொள்ளாத காரிய கமிட்டி அவரை தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்குமாறு சொல்லியிருக்கிறார்கள்.
அன்று காரிய கமிட்டியில் பேசிய ராகுல் “இங்கே பல அமைச்சர்கள் தங்கள் மகன்களுக்கு எம்.பி சீட் கேட்பதில் குறியாக இருந்தார்களே தவிர அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி இருந்தால் எப்படி” என வெடித்திருக்கிறார். அதற்கு காரிய கமிட்டி கட்சியை மேம்படுத்த எந்த வித முடிவையும் எடுக்கும் உரிமையை ராகுலுக்கு அளித்தது.
 
இதன் அடுத்தகட்டமாக கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராய தொடங்கியிருக்கிறார் ராகுல். இன்னும் 10 நாட்களில் தேர்தல் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க போவதாக கூறப்படுகிறது.