செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (12:24 IST)

5 ஆண்டுகள் விரைவாக சென்று விடும்.. அடுத்த பிரதமர் ராகுல்தான் – திருநாவுக்கரசர்

மக்களவைத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் படுதோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்தமுறைக் ராகுல்காந்தி பிரதமராக வருவார் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காவி மயமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகம் மட்டும் இன்னமும் கருப்புமயமாகவே இருக்கிறது. வட இந்தியா முழுவதும் காங்கிரஸை கைகழுவ தென் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தகுந்த வெற்றியைக் கொடுத்துள்ளது.

காங்கிரஸுக்குப் படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைக் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்கவில்லை. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ராகுல் காந்தி குறித்து பேசியுள்ளார். அதில் ‘5 ஆண்டுகள் என்பது விரைவில் போய்விடும். அதன் பின் ராகுல் காந்தி பிரதமராக வருவார்’ எனத் தெரிவித்துள்ளார்.