வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (13:10 IST)

’ஆந்திர அரசியலில்’ நடிகை ரோஜாவின் வெற்றி சீக்ரெட் !

தமிழ் சினிமாவில் 90 களில் அனைத்து முக்கிய ஹோரோக்களின்  ஃபேவரைட் ஹீரோயினாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் வீரா, உழைப்பாளி, கூலி என்ற வரிசையாக வெற்றிப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர், கார்த்தி, சரத்குமார், பிரபு போன்றவர்களுடன் கலக்கலாக நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றார் ரோஜா.
பின்னர் 90 களின் இறுதியில் அரசியலில் சேர முடிவெடுத்த ரோஜா, கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆந்திராவில் பிரபலமான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பணிகளைக் கவனித்து வந்தார்.
 
ஆனால் உட்கட்சி மோதல்கள் முன்னணி நடிகையான ரோஜாவின் வளர்ச்சி ஏறுமுகமாக இல்லை. ஆனாலும் தன் தன்னம்பிக்கையால் அக்கட்சியில் குறுக்கிய காலத்தில் பிரபலமானார். அதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் வேட்பாளராக களமிறங்கினார்.
 
 இதில் இவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவே ரோஜாவின் வெற்றிக்கு எதிராகச் செயல்பட்டு அவரைப் படுதோல்வி அடையச் செய்ததுதான் ரோஜாவின் மனதில் ஆற்றுப்படுத்த முடியாத காயத்தை உண்டு பண்ணியது.
 
இத்தனை சோதனையை சகித்தவர்,இனி தான் இக்கட்சியில் தொடர்ந்தால் முன்னேற முடியாது என்பதைத் தீர்மானித்து அப்போது வளர்ந்துகொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.
அப்போது அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டுக்கு எதிராக அனைவருமே திரண்டு வருமானத்துக்கு எதிராக சொத்து சேர்ந்ததாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆனால் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை. அவருக்கு தக்க ஆலோசனை அளிப்பவராக ரோஜா திகழ்ந்தார். இவரகளுடைய அயராத உழைப்பு கட்சி தொண்டர்களை எழுச்சி அடையச் செய்தது.
 
தொடர்ந்து 10 வருடம் முயற்சியால் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அம்மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்துள்ளார்.நடிகை அவரது அவரது ஆலொசகராக, திட்ட செயல்பாட்டாளராக இருந்துவருகிறார்.
 
இதே 10 வருடங்களுக்கு முன்னர் ரோஜாவை தோல்வியடையச் செய்த சந்திரபாபு நாயுடு தற்போது நடிகை ரோஜாவி வளர்ச்சியை கண்டு சற்று அதிர்ந்து போயிருப்பதில் ஆச்சர்யமில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.