ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (08:58 IST)

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு தமிழருக்கா? காங்கிரஸ் தீவிர ஆலோசனை

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் வெறும் 52 தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 44 தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் இம்முறை 8 தொகுதிகளில் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது. அதிலும் இந்த 52 தொகுதிகளில் தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் இருந்து மட்டும் 24 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்க ராகுல்காந்தி விரும்பாத நிலையில் தமிழருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வசந்தகுமார், திருநாவுக்கரசர், மாணிக் தாகூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
அதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சசிதரூர், சுரேஷ் கொடிகுன், முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன் ஆகியோர்கள் பெயர்களும் பரிசீலிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மத்திய அமைச்சருக்கு இணையான முக்கிய பதவி என்பதால் இந்த பதவி ஒரு தமிழருக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்