1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (17:15 IST)

பரமாத்மா அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம்: ராகுல் காந்தி

Raghul Modi
நான் பரமாத்மா என்றும் கடவுள் தான் என்னை நேரடியாக அனுப்பினார் என்று பிரதமர் மோடி கூறியதற்கு அதானி தான் காரணம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, ’மீண்டும் பிரதமராக முடியாது என்று நாம் மோடிக்கு தெரிந்து விட்டது, அதனால் தான் அவர் தான் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் என்ற கதையை கூறி இருக்கிறார்.
 
தேர்தலுக்கு பிறகு அமலாக்கத்துறை அதானி குறித்து அவரிடம் விசாரணை செய்யும் போது எனக்கு தெரியாது, பரமாத்மா சொன்னதை செய்தேன் என்று கூறுவார், அதற்கான முன் தயாரிப்புதான் இது என்று ராகுல் காந்தி கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரதமர் மோடி நாட்டு மக்களின் மீது கவனம் செலுத்தாமல் ஆட்சியை தக்க வைக்கவே செயல்பட்டு வருகிறார் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது பெண்களுக்கான நிதி உதவி வழங்கப்படும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்  என்றும் தெரிவித்தார்
 
மேலும் நாட்டை பிளவுபடுத்துவதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என்றும் உங்கள் ஆட்சியில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை கொடுத்தீர்கள் என்பதை பற்றி உரையாற்றுங்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். 
 
Edited by Mahendran