தொடர்புடைய செய்திகள்
- இங்கெல்லாம் நீங்க வரக்கூடாது! – ராகுல்காந்திக்கு அனுமதி மறுத்த யோகி!
- விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம்! – வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்!
- உத்தர பிரதேச வன்முறை; யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்! – திருமா கண்டனம்!
- பஞ்சாப் முதல்வருக்கு உத்தரபிரதேசத்தில் அனுமதி மறுப்பு!
- எதிர்கட்சி தலைவர் வீட்டு சிறை; முதல்வர்கள் வர தடை! – பரபரப்பான உத்தர பிரதேசம்!
லக்னோ போனவருக்கு லக்கிம்பூர் போக நேரமில்லையா? – பிரதமருக்கு ராகுல் கேள்வி!
உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்லாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணம் செய்தபோது அணிவகுத்த கார் அங்கு போராடிய விவசாயிகளை மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காண சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாநில முதல்வர்கள் உ.பி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தி உ.பி செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “என்னையும், என் குடும்பத்தினரையும் எவ்வளவு துன்புறுத்தினாலும் விவசாயிகள் பக்கம் நின்று போராடுவோம். நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
