1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi mp post in danger?

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்படுமா? எதிர்க்கட்சி எம்பிக்கள் அவசர ஆலோசனை..!

மோடி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்படுமா என்பது குறித்த அவசர ஆலோசனை இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி, ‘மோடி என்ற பெயரை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனை அடுத்து அவர் மீது தொடுத்த அவதூறு வழக்கில் நேற்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!