திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (17:11 IST)

'எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம் '- முதலமைச்சர் உத்தரவு

'எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய வேண்டாம்' என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் விவகாரத்தில்  சிபிஐ போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனால், ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சியினரிடையே இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈந்த நிலையில்,  ஆம் ஆத்மி கட்சி ஆதவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஓட்டிய  நிலையில், இதற்குப் பதிலடியாக பாஜகவினரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ‘கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள்’ என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டினர்.

பாஜகவின் டெல்லி தலைவரான மன்ஜீந்தர் சிங் சிர்சா சாபில் கெஜ்ரிவாலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

எனவே பிரதமர் மோடிக்கு எதிராகப் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து,  6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘எனக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது  கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.  அவர்களின் கருத்தை வெளியிட உரிமையுண்டு, எனக்கு எதிரான அவர்கள் கூறியதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை’ என்று கூறியுள்ளார்.