1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (11:34 IST)

கொட்டும் மழையும் தடுக்காது ராகுல் காந்தியின் நடைபயணத்தை..!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம் கர்நாடகாவில் கொட்டும் மழையையும் தொடர்கிறது.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக இந்திய ஒற்றுமை என்ற நடைப்பயணத்தை நடத்தி வரும் நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளாவில் முடித்துவிட்டு அதன் பின் தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது.

கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டல்பேட்டை வழியாக மைசூரு, மாண்டியாவில் பயணத்தை தொடர்ந்த ராகுல் இன்று காலை சித்திரதுர்கா மாவட்டம் ஹார்திகோட்டையில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

வழியில் போச்கட்டே பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர் பயணத்தை தொடர்ந்தார். இந்த யாத்திரையில் சிறுவர்கள், பெண்கள், என பெரும்பான்மையானவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராகுலுடன் நனைந்தவாறு பங்கேற்றுள்ளனர்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை நடை பயணம் குறித்து கருத்து கேட்ட போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டாலும் வேறு யார் கலந்து கொண்டாலும் எந்தவித தாக்கத்தையும் கர்நாடக மாநிலத்தில் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் நடைபயணம் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.