1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (10:11 IST)

எனது ஆதரவு இவருக்கு தான்.. காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து கார்த்திக் சிதம்பரம்

chidambaram
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிடாத நிலையில் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டி போட்டுள்ளனர் 
 
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசிதரூருக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 
 

Edited by Siva