வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (15:42 IST)

கர்நாடகாவில் அடிவாங்கும் பொன்னியின் செல்வன் வசூல்… காரணம் இந்த படம்தானா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் படத்தின் வசூலில் கொஞ்சம் குறைவாக உள்ளதாம். அதற்குக் காரணம் அங்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள காந்தாரா திரைப்படத்தின் வெற்றிதான் காரணமாம். இதனால் அந்த திரைப்படத்துக்கு அதிகளவில் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.