தொடர்புடைய செய்திகள்
- மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் முக்கிய ஆலோசனை
- பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா ஒழியும்! – முதல்வர் கவலை!
- தாயின் இறுதிச் சடங்கு முடிந்ததும் கொரோனா பணியில் ஈடுப்பட தூய்மைப் பணியாளர் ! முதல்வர் நெகிழ்ச்சி
- ’’ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை !
- மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி தொடர் கதையாகட்டும்! – ராமதாஸ் டுவீட்
மேலும் இரு வாரங்கள் ஊரடங்கு! முதன் முதலில் அறிவித்த முதல்வர்!
பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்
இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதை நீட்டித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது பின்னர் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஊரடங்கு முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப்பில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் இதுவரை 322 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருந்தாலும் ஊரடங்கு இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
