தாயின் இறுதிச் சடங்கு முடிந்ததும் கொரோனா பணியில் ஈடுப்பட தூய்மைப் பணியாளர் ! முதல்வர் நெகிழ்ச்சி
பெரம்பலூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாள் திரு. அய்யாத்துரை என்பவரின் தாய் காலமானார். ஆனால் , தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே அவர் இறுதிச் சடங்கு முடிந்ததும் பணியில் ஈடுபட்டார். இந்தக் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தனது தாயாரை இழந்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர் திரு.அய்யாதுரை அவர்கள், தாயை இழந்த சோகம் மறையும் முன்னரே, இறுதிச் சடங்கு முடிந்ததும் வந்து கொரோனா பணியில் ஈடுபட்டது நெகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை காக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் தலை வணங்குகிறேன்’’. என தெரிவித்துள்ளார்.