மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் முக்கிய ஆலோசனை
மே 3க்கு பிறகு ஊரடங்கு தளர்வா? அல்லது நீட்டிப்பா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தற்போது காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்
நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது மாவட்டஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரையை அவர் அளித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை பெரிய நகரம், மக்கள்தொகை அதிகம் உள்ளதால் பாதிப்பு அதிகம் என்றும், அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம் என்றும் முதல்வர் இந்த ஆலோசனையில் கூறியதாக தெரிகிறது
மேலும் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருசில நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நெருக்கடியான நிலையிலும் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது