1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:52 IST)

’’ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தாக்கல் இன்னும் குறையாததால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வருகிறது.

இந்நிலையில், "தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பிசிஆர் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வழங்க வேண்டும்; உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.