வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (10:46 IST)

பஞ்சாப் காங். வேட்பாளர் பட்டியல்: சித்து போட்டி எங்கே?

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது
 
இந்த பட்டியலில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அவர்கள் சரண்ஜித் சிங், சம்கவுர் சாகிப் என்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து,அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் சோனுசூட் தங்கை மாளவிகா, மொகாஹே என்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது