புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:20 IST)

பஞ்சாப் முதல்வரின் உறவினர் கைது: என்ன காரணம்?

மணல் குவாரி வழக்கில் பஞ்சாப் மாநில முதல்வரின் உறவினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனி என்பவர் மீது சட்டவிரோத மணல் குவாரி வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது 
இதனை அடுத்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனியை  கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹனி சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வரின் உறவினர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது