1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thaniyarasu contest in thiruvotriyur ward

முதல்வர் கையால் விருது பெற்றவருக்கு திமுகவில் சீட்: உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறார்!

தனியரசு
முதல்வர் கையால் விருது பெற்றவருக்கு திமுகவில் சீட்: உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறார்!
குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையால் விருது பெற்ற தனியரசு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றுள்ளார். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உரிய நேரத்தில் மக்களை காப்பாற்றியவர் அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தனியரசு
 
இதனைப் பாராட்டி குடியரசு தின விழாவின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் இவருக்கு விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளராக உள்ள தனியரசு பத்தாவது வார்டில் போட்டியிட சீட் பெற்றுள்ளார்
 
இதனையடுத்து அவர் நேற்று மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது நூற்றுக்கணக்கான மக்களை உரிய நேரத்தில் காப்பாற்றிய தனியரசு தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
About Writer
siva