செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:30 IST)

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நடனமாடிய முதலமைச்சர்!

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நடனமாடிய முதலமைச்சர்!
பஞ்சாப் மாநில முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற சரண்ஜித் சிங் என்பவர் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் திடீரென நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் அவர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து சரண்ஜித் சிங் என்பவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்
 
இந்த நிலையில் அவர் இன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அங்கு நடனக்கலைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டு இருந்ததை ரசித்துக்கொண்டிருந்த முதல்வர் திடீரென அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய தொடங்கிவிட்டார்
 
தங்களுடன் முதலமைச்சரை நடனம் ஆடியதை பார்த்து நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் அவர்களுக்கு தங்களுடைய நன்றியை முதல்வர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது