1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:41 IST)

டீம் அறிவிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்! – போட்டோ போட்டு சிக்கிய ஹூடா!

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் அணி வரிசை அறிவிக்கப்படும் முன்னரே பஞ்சாப் வீரர் ஹூடா புகைப்படம் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸோடு மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 183 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியுற்றது.

இந்நிலையில் அன்றைய ஆட்டத்தில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி பட்டியல் வெளியிடப்படும் முன்னதாக பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா தான் ஹெல்மெட்டோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பதிவிட்டது சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என புகார்கள் எழுந்துள்ளதால் இதுகுறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.