திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:56 IST)

அடுத்த முதல்வர் விஜய்தான்..! – வேட்புமனு தாக்கல் செய்து ரசிகர்கள் முழக்கம்!

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த விஜய் ரசிகர்கள் முழக்கம் இட்டு சென்றது வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த தேர்தலில் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காஞ்சிபுரத்தில் வடக்குப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்செல்வன் வேட்புமனு அளித்துள்ளார்.

வேட்புமனு அளிக்க சென்றபோது சுமார் 200 விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்க கொடிகளை ஏந்தியபடி அடுத்த முதல்வர் விஜய்தான் என கோஷமிட்டு சென்றது வைரலாகியுள்ளது.