திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (12:02 IST)

போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றும் அமைச்சர்கள் - முதல்வர் பெருமிதம்

தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர் என முதல்வர் பெருமிதம். 

 
தமிழகத்தில் விவசாயிகள் 1 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முன்னதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அண்ணா நூலகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் தருவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 
இதனைத்தொடர்ந்து அவர் பின்வருமாறு பேசினார், திமுக ஆட்சியை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழக அரசின் திட்டங்கள் நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். 
 
தமிழ்நாடு மின்வாரியத்தை அதிமுக ஆட்சியாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தை  சீரழித்து விட்டனர். அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன.