1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (10:44 IST)

சித்தியை அனுபவிக்க முயன்ற சிறுவன்.. மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை!

கர்நாடகாவில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது சித்தியை கற்பழிக்க முயன்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகா மாநிலம் உப்பினங்குடியை அடுத்த பிலியூர் கிராமத்தை சேர்ந்தவர் 37 வயது பெண் ஒருவர். திருமணமாகி கணவனை விட்டு பிரிந்த அவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியன்று யாருமில்லாத வீட்டில் அந்த பெண் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என பலரும் நினைத்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த பெண்ணுடன் அதே வீட்டில் தங்கியிருந்த அவரின் 16 வயதான அக்காள் மகனையும் போலீஸார் விசாரித்தனர். அதில் சிறுவன் அளித்த பதிலில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே தனியாக அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்துள்ளது.


இறந்து போன பெண்ணின் அக்காள் மகனான 16 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதனால் தனது பாட்டி மற்றும் சித்தியுடன் வசித்து வந்துள்ளான். அப்போது சிறுவனுக்கு தனது சித்தி மேல் ஆசை ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத அன்று தனது சித்தியிடம் உல்லாசமாக இருக்க சிறுவன் முயன்றுள்ளான். ஆனால் அதற்கு அவனது சித்தி மறுத்ததுடன், அவனை கண்டித்தும் உள்ளார்.

இதை வெளியே சொல்லிவிடுவாரோ என்று பயந்த சிறுவன் தனது சித்தியை அங்கேயே கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொன்றுள்ளான். தற்போது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K