தொடர்புடைய செய்திகள்
- வாயைவிட்டு மாட்டிக்கொண்ட தளபதியார்: டிவிட்டரில் டிரெண்டாகும் #ஜப்பான் துணைமுதல்வர் ஸ்டாலின்
- காக்கா யோகா செய்யும் முதல்வர்: கிரண்பேடி கடும் விமர்சனம்
- சின்னத்தம்பி போல் கிரண்பேடியையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
- முதல்வர் போராட்டம் வெற்றி – புதுச்சேரி திரும்பினார் கிரண்பேடி !
- வீரர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி; ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு
பணிந்தார் கிரண்பேடி: முடிவுக்கு வந்தது தர்ணா போராட்டம்
புதுவை ஆளுனர் கிர்ண்பேடி மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 39 கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பதாகவும், அந்த கோப்புகளுக்கு உடனடியாக ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கக்கோரியும் புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி தனது அமைச்சர்களுடன் ஆளுனர் மாளிகை முன் தர்ணா போராட்டம் நடத்தினார்
இந்த போராட்டம் ஒருவார காலம் நடந்த நிலையில் நிபந்தனையின்றி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆளுனர் கிர்ண்பேடி ஒப்புக்கொண்டார். இதன்படி நேற்று ஆளுனர் கிரண்பேடி - முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான பேச்சுவார்த்தை ஆளுனர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் முதல்வரின் பெரும்பாலான கோரிக்கைகளை கிரண்பேடி பரிசீலிப்பதாக தெரிவித்ததால் தர்ணா போராட்டம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டது. முதல்வரின் போராட்டத்திற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் நேரில் வந்து ஆதரவு கொடுத்ததால், கிரண்பேடி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
