வீரர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி; ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு

CM
Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (16:42 IST)
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 46 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. இது நாடெங்கும் கடும் அதிர்வலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மரணமடைந்துள்ளதால், நாடே கண்ணீர் கடலில் மிதந்துகொண்டிருக்கிறது. எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கண்டனக்குரல்களும் உரக்க ஒலித்து வருகிறது.
 
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி கொடுப்பதாக அறிவித்துள்ளார். வீரர்களை பறிகொடுத்து மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :