வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 31 ஜூலை 2021 (13:25 IST)

9 மண்டலங்களில் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டாத தனியார்

சென்னை உட்பட 9 மண்டலங்களில் ரயில்களை இயக்க தனியார் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 
நாடு முழுவதும் தனியாருடன் இணைந்து 12 மண்டலங்களில் 152 ஜோடி ரயில்களை இயக்கும் திட்டம் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனியாருடன் இணைந்து 29 ஜோடி ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் மொத்தம் உள்ள 12 மண்டலங்களில் டெல்லி 1, டெல்லி 2, மும்பை 2 மண்டலங்களில் மட்டுமே ரயில்களை இயக்க தனியார் முன்வந்துள்ளன. எஞ்சிய சென்னை உட்பட 9 மண்டலங்களில் ரயில்களை இயக்க தனியார் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரூ.7,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.