வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (09:07 IST)

சென்னை அங்காடிகளுக்கு ஆப்பு - 10 நாட்களுக்கு தடை!!

இன்று முதல் ஆகஸ்ட்  9 ஆம் தேதி காலை 6 மணி வரை குறிப்பிட்ட 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள், மது பார்கள் திறக்க தடை தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 
அதாவது இன்று முதல் ஆகஸ்ட்  9 ஆம் தேதி காலை 6 மணி வரை அங்காடிகள் செயல்பட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள அங்காடிகள் விவரம் பின்வருமாறு... 
 
1. வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை
2. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை
3. ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்கு தடை 
4. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை
5. என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை
6. ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை கடைகளுக்கு தடை  
7. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிகநகர் சந்திப்பு வரை கடைகளுக்கு தடை 
8. ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகளுக்கு தடை
9. வாட்டர் டேங்க் - காமாட்சி அம்மன் கோயில் வரை கடைகளுக்கு தடை