ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (08:38 IST)

சென்னையின் இன்று கோவிஷீல்டு, கோவாக்சின் 2வது டோஸ்!

சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பு தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் அனுப்பவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. 
 
பின்னர் கடந்த சில நாட்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி தமிழகத்திற்கு வந்து உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்தும் புனேவில் இருந்தும் அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் நிலையில் சற்று முன்னர் புனேவில் இருந்து சென்னைக்கு 4,70,350 கோவிஷீல்டு மற்றும் கோவாக்‌சின் தடுப்பூசிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தடுப்பூசிகள் வந்ததால் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலம் 100 பேருக்கும், நேரடியாக 200 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று போடப்படுமாம். இதேபோல கோவாக்சின் தடுப்பூசிக்கு ஆன்லைன் மூலம் 100 பேருக்கும், நேரடியாக 100 பேருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.