1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Prakash Raj files case against BJP MP for compensation

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரபல நடிகர் மானநஷ்ட வழக்கு..

பிரகாஷ் ராஜ்
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக எம்பி பிரதாப் மீது நஷ்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் நஷ்டயீடாக கோரியுள்ள பணத்தொகை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாஜக எம்பி பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். 
 
இதனால், நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் கேட்டு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் வரவில்லை. 
 
எனவே, தனது குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்பி மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
காலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்