கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்பி; வைரல் வீடியோ
மத்தியப்பிரதேச மாநில பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா தனது கைகளால் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்குவது அவரது இயல்பு. அவரது தொகுதி ரேவா பகுதியில் உள்ள காஜூஜா என்ற கிராமத்தில் தூய்மை பணி நடப்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றார்.
அங்கு அசுத்தமாக இருந்த கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.