வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 டிசம்பர் 2020 (07:06 IST)

இன்று பாஜக அலுவலகங்களை மூடும் போராட்டம்: நாடு முழுவதும் பரபரப்பு

மத்திய அரசின் வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி ஹரியானா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் போராட்டம் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது
 
மேலும் இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாஜக அலுவலகங்களை மூடும் போராட்டத்தை இன்று விவசாயிகள் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகம் இன்று மூடப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளதால் பாஜக அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏற்கனவே நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தின் முன் போராட்டம் நடத்த முயன்ற 4 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தொடர்ந்த விவசாயிகள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டம் தற்போது தீவிரமாக வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது