வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (09:20 IST)

ஸொமாட்டோ விவகாரம் – அமித் சுக்லாவை எச்சரித்த காவல்துறை !

ஸொமாட்டோவில் முஸ்லிம் ஒருவர் உணவு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய அமித் சுக்லாவை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஸொமாட்டோ இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனம். இதில் பலர் டெலிவரி பாய்களாக பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சுக்லாஅமித் சுக்லா ஸொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அதை டெலிவரி செய்ய வந்தவர் இந்து அல்ல என்பதால் அந்த உணவு பொருளை வாங்க முடியாது என்று அடம்பிடித்திருக்கிறார். இதனால் அந்த ஆர்டரைக் கேன்சல் செய்துவிட்டதாகவும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஸொமாட்டோ தரப்பு இதற்கு தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஸொமோட்டோ நிறுவனம் ’உணவில் மதம் இல்லை. உணவே மதம்தான்’ எனத் தெரிவிக்க அது டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனது. பலரும் அமித் சுக்லாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். ஒரு செய்தி ஊடகத்துக்கு இதுபற்றி பேட்டி அளித்த ஜபல்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் ‘மீண்டும் ஒருமுறை அரசியல் சாசனத்துக்கு முரணாக இதுபோல ட்விட்டரிலோ அல்லது வேறு எதிலோ கருத்து தெரிவித்தால் அமித் சுக்லா கட்டாயம் சிறை செல்ல நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.