செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:49 IST)

ராகுல் காந்தியால் அவதிக்கு உள்ளான வாலிபர்.. நடந்தது என்ன??

காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தியால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் பெயர் காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தியின் பெயரை கொண்டிருப்பதால், பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

மொபைல் சிம் கார்டு வாங்குவதற்காக ஆதார் கார்டு நகல் கொடுக்கும்போது அதில் உள்ள ராகுல் காந்தி என்ற பெயரை பார்த்து, போலி ஆதார் கார்டு என கடை உரிமையாளர் நினைப்பதாகவும், பிறரிடம் தன்னை அறிமுகப்படுத்தும்போது சந்தேகத்துடன் பலர் பார்க்கிறார்கள் எனவும் இந்தூரைச் சேர்ந்த ராகுல் காந்தி மனமுடைந்து கூறுகிறார்.

மேலும் இது குறித்து ராகுல் காந்தி,
”எனது தந்தை ராஜேஷ் மாளவியா, துணை ராணுவப் படையில் சலவையாளராக பணியாற்றும் போது, அவரை அனைவரும் காந்தி என்று அழைத்துள்ளனர். பின்னர் இந்த பெயரில் ஈடுபாடு கொண்ட தந்தை அதையே தனது பெயருடன் இனைத்து கொண்டார். இதன் பிறகு என்னை பள்ளியில் சேர்க்கும் போது ராகுல் மாளவியா என்பதற்கு பதிலாக ராகுல் காந்தி என பெயரை பதிவு செய்தார்” என கூறியுள்ளார்.

தனது பெயரிலுள்ள காந்தி என்ற பெயரை ”மாளவியா” என மாற்றுவதற்கு தற்போது தீவிரமாக யோசித்து வருகிறார் ராகுல் காந்தி.