1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:21 IST)

8 பத்திரிகையாளரை அரைநிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர்: என்ன காரணம்?

journalist
8 பத்திரிகையாளரை அரைநிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர்: என்ன காரணம்?
பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் 8 பத்திரிக்கையாளரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக செய்தியாளர்கள் யூடியூபை சேர்ந்தவர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்
 
அவர்களின் ஆடை களைந்து உள்ளாடையுடன் நிற்க வைத்து விசாரணைக்கு பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தெரிகிறது
 
எட்டு பத்திரிகையாளர்கள் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை அடுத்து காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது