1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (00:22 IST)

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

mr vijay bashkar
தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் மாவட்டத்தில் மீண்டும் எல்லைமீறும் திமுக ஒப்பந்ததாரர் – செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும் பணிகள் ஜரூர் – மூன்றாவது நாளாக மூன்றாவது முறையாக அதிமுக வினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்.
 
கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் Sankaranand Infra , Contractor Karur என்ற கட்டுமான நிறுவனம் கரூர் நெடுஞ்சாலை துறையில் பல இடங்களில் சாலை பராமரிப்பு டெண்டர் எடுத்து அந்த பணியை செய்யாமலேயே செய்ததாக கூறி கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer திருமதி சத்திய பாமா அவர்களின் துணையுடன் அரசு பணத்தை கொள்ளையடித்துவிட்டனர். இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரப்பூர்வமாக கடந்த 05.04.2022 அன்று விரிவான விசாரனை நடத்தி சம்மநிதப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி , கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தார் , மேலும் அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுலவலர் அவர்களிடம் நேரில் சென்று மனு அளித்திருந்தார். இந்நிலையில் இதை தெரிந்து கொண்டு எப்படியாவது இந்த ஊழல் சம்பவத்தில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கரூர் நெடுஞ்சாலை துறை Divisional Engineer அவர்களின் உதவியோடு , Sankaranand Infra , Contractor Karur என்ற நிறுவனம் சாலை பராமரிப்பு வேலைகளை விசாரனையில் உள்ள சம்மந்தப்பட்ட இடங்களில் செய்து வருகின்றனர் . எனவே பராமரிப்பு வேலைகளை நிறுத்த சொல்லி 06.04.2022 அன்று புகார் மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிகா அவர்கள்  மனு அளித்து இருந்தார். ஆனால் , புகார் மனு நிலுவையில் உள்ள போது ஊழல் சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள தடயங்களை அளித்து வருகின்றனர். அதனால் மேற்கண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அவர்களிடம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  மற்றும் அதிமுக வினர்  மனு அளித்தார். உடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுப்பிரமணி, கரூர் ஊராட்சி மன்ற ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன், கரூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா சுப்பராயன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசுதன், 11 வது வார்டு கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ் குமார்,  வழக்கறிஞர் கரிகாலன், அதிமுக நிர்வாகிகள் அருண் தங்கவேல், ஆயில் ரமேஷ், நீலிமேடு பிரபாகரன், கராத்தே ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
 
மேலும், தமிழக அளவில் ஆங்காங்கே பொங்கல் தொகுப்பில் ஊழல் என்ற செய்திகள் வெளியாகி தற்போது அதே மறையாத நிலையில், ரோடு போடவில்லை, ரோடு போட்ட்தாக கூறி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பரும், திமுக ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் என்பவரது நிறுவனம் சுமார் 3.80 கோடி மதிப்பில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதை வெட்ட வெளியில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஆதரப்பூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தமிழக அளவில் ஒரு மிகப்பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது, இந்த சம்பவம், புகார் கொடுத்தவுடன் குற்றத்தினை மறைக்க அன்று முதல் தற்போது வரை சாலைகள் போடும் பணியில் அந்த திமுக ஒப்பந்ததாரர் நிறுவனம் தீவிரப்படுத்தும் பணியில், அதிமுக வினரும், அந்த தார்சாலைகள் தரமானதாக இருக்காது என்றும், முதலில் போடாத சாலைக்கு எப்படி பில் பாஸ் ஆனது. தற்போது ஊழல் வெட்டவெளியில் கொண்டு வந்த பின்னர் தானே தார்சாலைகள் போடப்பட்டு வருகின்றது என்றும் அந்த தார்சாலைகள் தான் நன்கு உள்ளது,. அப்புறம் எதற்கு மீண்டும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே அந்த தார்சாலை போடும் பணி நிறுத்த வேண்டும் என்று மூன்றாவது நாளாக மூன்றாவது முறையாக அதிமுக வினர் மனு கொடுத்து வருவது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, மக்களின் வரிப்பணத்தில் மோசடி செய்த நபரை இப்படி பொதுவெளியில், ஆதரப்பூர்வமாக கேள்வி கேட்டால் தான் இப்படி மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறையும், அப்போது தான் அவர்களுக்கும் நாம் தவறு செய்துவிட்டோம் என்று கருதுவதோடு, அவர்களுக்கு நீதியின் தீர்ப்பு கிடைக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒரு மித்த கருத்தாகும்