1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (15:36 IST)

செஞ்சிலுவை சங்கத்தின் சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

enforcement
தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான செஞ்சிலுவை சங்கத்தின் 3.37 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
செஞ்சிலுவை சங்கம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ளது என்பதும் இந்த சங்கத்தின் நிர்வாகிகள் சொந்தமான ரூ.3.37  கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
2020 ஆம் ஆண்டு இது குறித்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது செஞ்சிலுவை சங்கத்தின் கிளைகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தின் கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.நசுருதீன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது 
 
மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva