வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (15:28 IST)

2 மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை போலவே மீண்டும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி வாழ்வாதாரம் இன்றி உள்ளனர் 
 
இந்த நிலையில் மத்திய அரசு பொதுமக்களின் வங்கி கணக்குகளில் மாதாமாதம் பணம் போட வேண்டும் என்றும் பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இந்த நிலையில் சற்று முன் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மே ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக தரப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்