ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:18 IST)

தாக்குபிடிக்குமா இந்தியா...? மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை. 

 
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை படுவேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. 
 
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆக்ஸிஜன் சப்ளை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.