செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (12:03 IST)

கலாய்ப்போம் நாங்க! கலாய்ச்சிட்டு போங்க! – மோடியின் வைரல் ட்வீட்!

மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு கிண்டல் செய்யப்போவதாக தெரிவித்ததற்கு ‘தாராளமாக செய்து கொள்ளுங்கள்’ என மோடி பதில் அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. பிரதமர் மோடியும் சூரிய கிரகணத்தை பார்க்க முயன்றபோது மேகங்கள் மறைத்ததால் அவரால் பார்க்க முடியாமல் போனது. ஆனால் நேரடி ஒளிபரப்பில் அவர் அதை கண்டார்.

தான் சூரிய கிரகணம் பார்க்க முயன்றது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, கூடவே தான் சூரிய கண்ணாடி அணிந்து வானத்தை பார்க்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை ஷேர் செய்த மற்றொரு ட்விட்டர் கணக்காளர் ‘இந்த புகைப்படம் மீம் மெட்டீரியலாக மாற போகிறது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி ”கண்டிப்பாக வரவேற்கிறேன்.. என்ஜாய்!” என பதிலளித்துள்ளார். தன்னை பற்றிய கிண்டல்களை பிரதமர் மோடி கூலாக கடந்து சென்றதை பலர் Coolest PM என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.