1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi will conference with state chief ministers

அதிகரிக்கும் கொரோனா; முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Corona Spread
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவி வருவதால் அடிக்கடி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபமாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

வட மாநிலங்களான உத்தர பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 27ம் தேதியன்று கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல் அமைச்சர்களோடும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த காணொலி ஆலோசனையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயருகிறதா?