வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (13:44 IST)

இந்தியாவில் குறையும் கொரோனா; இன்று மாலை நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதில் நாட்டு மக்களிடம் கொரோனா குறைந்து வருவது குறித்தும், நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.