புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (13:07 IST)

தமிழ்நாட்டுல செமையா கதை சொல்வாங்க! – பிரதமர் மோடி புகழாரம்!

இன்று மாதாந்திர மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தென்னிந்தியாவின் கதை சொல்லல் மரபு குறித்து பெரிதும் புகழ்ந்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமையில் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தனது எண்ணங்களை பகிர்ந்து வருகிறார். இந்த மாதத்திற்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் மோடி இந்திய பண்பாட்டில் கதை சொல்லும் போக்கு குறித்து பேசினார்.

அப்போது அவர் “இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளத்தில் பலத்தரப்பட்ட கதை சொல்லும் முறைகள் உள்ளன. தமிழகத்தின் வில்லுப்பாட்டு இசையுடன் கூடிய கதை சொல்லும் முறையில் சிறந்தது. தமிழகத்தை சேர்ந்த வித்யா என்பவர் புராணங்களை கதையாக கூறி வருகிறார். பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துகிறது” என கூறியுள்ளார்.