வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:01 IST)

டயர்டாகி இருப்பீங்க.. டீ குடிங்க ப்ரெண்ட்! – ஹரிவன்ஷ் செயலால் மோடி பெருமிதம்

மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா செய்து வரும் எம்பிக்களுக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் பேசி வந்தனர். இந்நிலையில் தங்கள் கருத்துகளை ஏற்று மசோதாவில் மாற்றங்கள் செய்யவில்லையென எம்.பிக்கள் புகார் தெரிவித்து பாராளுமன்ற விதிகள் புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய போராட்டம் நடத்தி வந்த அவர்களுக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்து அளித்துள்ளார். ஆனால் அதை வாங்க அவர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் ஹரிவன்ஷ் செயலை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். தன்னை இகழ்ந்தவர்களுக்கும் தேநீர் வழங்குவது ஹரிவன்சின் மகத்துவத்தை காட்டுகிறது என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.