வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:08 IST)

தீய சக்திகள் விவசாயிகளை திசை திருப்புகின்றன! – பிரதமர் மோடி உஷார்!

தீய சக்திகள் விவசாயிகளை திசை திருப்புகின்றன! – பிரதமர் மோடி உஷார்!
மத்திய அரசின் விவசாய மசோதா குறித்து பலர் மக்களுக்கு தவறான தகவல்களை அளித்து திசை திருப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த மசோதாவை கண்டித்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதள அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சீர்திருத்த மசோதாக்கள் இந்திய வேளாண் மற்றும் விவசாய துறையில் மிக முக்கியமான தருணமாகும். இதன்மூலம் இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும். உண்மையில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதா குறித்த தவறான தகவல்கள் சில தீய சக்திகளால் பரப்பப்படுகின்றன” என தெரிவித்துள்ளார்.