வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:34 IST)

ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்; இந்தியாவின் ஒற்றுமை வலுவானது! – பிரதமர் மோடி உரை!

நாட்டின் 74வது சுதந்திர தின விழாவில் உரையாற்றி வரும் பிரதமர் இந்தியாவின் ஒற்றுமையை சிலர் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர் “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காரணமாக இந்த முறை சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய சுதந்திர போராட்டம் உலகத்திற்கே ஒரு பெரும் உத்வேகத்தை அளித்திருப்பதாக கூறியுள்ள அவர், இந்தியர்களின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டதாகவும், ஆனால் இந்தியா தனது போரில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சுதந்திர தினத்தில் சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருவதாக கூறியுள்ள அவர் நாடு தன்னைறைவு பெறுவதே அரசின் இலக்கு என கூறியுள்ளார்..